Categories
மாநில செய்திகள்

திருமாவளவன் பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.

Categories

Tech |