தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து வருகின்ற 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.