பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஈச்சங்காடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரின் சகோதரி வீட்டில் ஒரு மாதமாக தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனை அடுத்து கோயமுத்தூர் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த ஆறுமுகம் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது ஜோலார்பேட்டையில் இருந்து வந்த ரயில் அவள் மீது மோதியுள்ளது. இதில் ரயிலில் சிக்கி உடல் நசுங்கி சிதைந்து ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.