உழவர் சந்தையை மேம்படுத்த 2 கோடியே 57 3/4லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றி உள்ள 3 இடங்களில் உழவர் சந்தை அமைந்திருக்கின்றது. இதில் உழவர் சந்தையில் மொத்தமாக 2800 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சராசரியாக 45 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நாள்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 60 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்து வருகின்றது.
இதனையடுத்து உழவர் சந்தை மூலமாக விவசாயிகளுடைய உற்பத்தியான விலைப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்பின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விலை பொருட்களை வாங்குவதால் நுகர்வோர்களுக்கு உள்ளூர் சில்லறை அங்காடி விலையை விட 15 சதவீதம் குறைவாக கிடைக்கப் பெறுகின்றது. இதையடுத்து இத்திட்டம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு இந்த வருடம் நமது மாவட்டத்திற்கு கூடுதல் நிதியாக 2 கோடியே 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
அதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் இருக்கின்ற உழவர் சந்தைக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைக்குமாறு கலெக்டர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உழவர் சந்தையில் விவசாயிகள் உறுப்பினராக தேவைப்படும் ஆவணங்கள் குறித்து விளக்கங்கள் பெற வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண்மை துணை இயக்குனர் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.