Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பூஜை சோறு சமூக வலைதள குழு…. பசியாறும் ஏழை எளிய மக்கள்…. வாலிபர்களின் அருமையான செயல்….!!

பூஜை சோறு சமூக வலைதள குழு மூலம் ஏழை எளிய மக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பகுடி பகுதியில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் கூறும்போது தாங்கள் பூஜை சோறு சமூகவலைதள குழு ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றும் பணியை செய்து வருகின்றோம் எனவும் இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஒரு மாதம் முழுவதும் 3000 பேர் இந்த கிடா விருந்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கிடா விருந்தானது முதலில் அய்யனார், கருப்பர் உள்ளிட்ட குல தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டு பின்னர் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |