தலிபான்கள் கைவசம் தற்போது 3 லட்சம் ஆயுதங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது..
உலகமே இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைதான்.. ஆம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. ஆப்கான் அரசு படைகளும், அமெரிக்க படைகளும் இணைந்து 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த நிலையில், அமெரிக்க படைகள் அதிபரின் உத்தரவையடுத்து வெளியேற தொடங்க, தலிபான்கள் எளிதாக ஆப்கானை கைப்பற்றி விட்டனர்..
இனி அங்கு பழமைவாத ஆட்சி நடைபெறும் என மக்கள் அஞ்சுகின்றனர்.. 50 முதல் 70 ஆயிரம் தலிபான்கள் இருக்கும் நிலையில், ஆப்கான் மற்றும் அமெரிக்க படைகள் என கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்கள் இருந்தும் எப்படி ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றினர் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது.. உலகமே ஆப்கானை நினைத்து கவலை படுகிறது..
இந்த நிலையில் தலிபான்கள் கைவசம் தற்போது 3 லட்சம் ஆயுதங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள், ஆப்கான் ராணுவ படையின் ஆயுதங்கள் தலிபான் வசம் சென்றன.. 3 லட்சம் ஆயுதங்கள் தலிபான் வசம் உள்ளதால், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கான் மாறலாம் என தகவல் வெளியாகியுள்ளது..