ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு, அவர்கள் கொலைப்பட்டியலை தயாரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கொலை பட்டியல் தயாரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பெண்கள் கொடுமைகளை சந்திப்பார்கள் என்றும், அவர்களின், வீட்டின் முன்பே கொல்லப்படலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள், தற்போது காபூலில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சோதனை மேற்கொள்ள தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் காபூல் அரசுடன் பணிபுரிந்த இராணுவத்தினர், அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் போன்றோரை குறிவைக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலிபான்கள் ஆதரவுடன், அயல் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் கூட்டமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இறங்கவுள்ளார்கள் என்றும் பிரிட்டன் போன்ற பிற நாட்டு மக்கள் உடனே வெளியேறுங்கள் என்றும் தலிபான்களின் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும், பிற நாடுகளின் தலிபான் ஆதரவால் தான், விரைவில் நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது என்றும் தலிபான் அமைப்பு கூறியிருக்கிறது. மேலும், அவர்கள் கொடுமையானவர்கள், மூடர்கள், நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவதற்கு அவர்கள் வரவில்லை என்று தலிபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதல் ஆட்சி காலத்தில் மேற்கொண்ட கடும் சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்கிறார்கள். காபூலில் அதிகாரிகள் பலர், தங்களின் கடைசி தினங்களை எண்ணிக்கொண்டிருப்பதாகவே கூறுகிறார்கள். மேலும், அரசின், ஊடகத்தில் பணிபுரிந்த பெண்களுடைய பட்டியலை சேகரித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.