Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தற்கொலை முயற்சி செய்து பிழைத்தவர்…. திடீர் மரணத்திற்கு காரணம் என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!

மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்காலனி பகுதியில் வடக்கத்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கஈஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதமாக தங்கஈஸ்வரனுக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதற்காக தங்கஈஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தத்துக்கு ஆளான தங்கஈஸ்வரன் எலி மருந்தை குடித்துள்ளார். அதன் பிறகு தங்கஈஸ்வரனை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க செய்துள்ளனர். இதனை அடுத்து தங்கஈஸ்வரன் மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி விரைந்து சென்ற உறவினர்கள் தங்கஈஸ்வரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தங்கஈஸ்வரனின் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தங்கஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |