Categories
உலக செய்திகள்

BREAKING : நானே ஆப்கான் அதிபர்… துணை அதிபர் ட்விட்..!!

ஆப்கானில் நானே இருப்பதால் தற்போது நானே அதிபர் என துணை அதிபர் தெரிவித்துள்ளார்..

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பித்து நாட்டை  விட்டு தப்பித்து ஓமனுக்கு சென்று விட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. ஆப்கான் அரசு படைகளும், அமெரிக்க படைகளும் இணைந்து 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த நிலையில், அமெரிக்க படைகள் அதிபர் பைடனின் உத்தரவையடுத்து வெளியேற தொடங்க, தலிபான்கள் எளிதாக ஆப்கானை கைப்பற்றி விட்டனர்.. இந்த அரசுக்கு சீனாவும் பாகிஸ்தானும் ஆதரவு கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கான் துணை அதிபர் அம்ருல்லா சாலே ட்விட் செய்துள்ளார்.. அதில், சட்டப்படி நானே அதிபர்.. ஆப்கானில் நானே இருப்பதால் தற்போது நானே பொறுப்பு அதிபராக இருக்கிறேன்.. ஆப்கான் சட்டப்படி அதிபர் எஸ்கேப், ராஜினாமா அல்லது இறந்தால்  துணை அதிபர் பதவிக்கு வர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.. எனக்கான ஆதரவை வழங்க வேண்டுமென ஆப்கானில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்..

 

Categories

Tech |