Categories
சினிமா தமிழ் சினிமா

Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலிருந்து விலகிய பிரபல ஜோடி… ரசிகர்கள் வருத்தம்…!!!

Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து பிரபல ஜோடி விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் அர்ச்சனா இருவரும் தொகுத்து வழங்கி வந்தனர்.

Sofia Manikandan Wiki, Biography, Age, Movies, Images - Tech Kashif

தற்போது அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதில் அறந்தாங்கி நிஷா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிகண்டன் ராஜேஷ்- சோபியா ஜோடி திடீரென விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் இவர்கள் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

 

Categories

Tech |