வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 21லட்சம் ரூபாய் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பருத்தி ஏலம் நடை பெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், ஆத்தூர் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 9,620 ரூபாய்க்கும், அதிக பட்ச விலையாக 10,399 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்படி 693 பருத்தி மூட்டைகள் என 21லட்சம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.