Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு… “இனியும் பொறுக்க மாட்டார்கள்”… மத்திய அரசை எச்சரிக்கும் கமல்ஹாசன்….!!!

தமிழகத்தின் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் விலை மேலும் ரூபாய் 25 அதிகரித்துள்ளது. ரூபாய் 25 விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் சிலிண்டர் விலை 852 லிருந்து 877 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிகுந்த இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் பெட்ரோல் டீசல் விலை, சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமையல் எரிவாயு விலை உயர்வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை! ” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |