கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே 15 வயது சிறுமியை அதிமுக கிளைச் செயலாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணலூர்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாத்தா முனியாண்டி என்பவன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாத்தா அந்த சிறுமியிடம் தகாத உறவு கொண்டதன் காரணமாக அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்திராணி என்பவரிடம் கடந்த 30ஆம் தேதி அந்த சிறுமியை அழைத்துச் சென்று செவிலியர் ஒருவரை வைத்து யாருக்கும் தெரியாமல் பிரசவம் பார்த்துள்ளார்.
மேலும் அந்த சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் விமல் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் முனியாண்டி மற்றும் இந்திராணியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முனியாண்டி அதிமுக கிளை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.