ஊதுபத்தி தொழிலாளி வீட்டில் உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி ரோடு பகுதியில் நடராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், 1, 16, 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 12 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து இதுபற்றி நடராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.