Categories
உலக செய்திகள்

BREAKING : பயப்படாதீங்க… “எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை”… தலிபான் அமைப்பு..!!

தூதரகங்கள் பாதுகாப்பாக இருக்கும், எந்தவித போரையும் தொடரப் போவதில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது..

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பித்து நாட்டை  விட்டு தப்பித்து ஓமனுக்கு சென்று விட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது..  இந்த அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகள் ஆலோசித்து வருகிறது.. இந்த நிலையில் தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான முல்லா அப்துல் கனி ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Will not be good': Taliban warns India against playing any military role in  Afghanistan

 

தலிபான் அமைப்பு கூறியதாவது :

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். காபூலில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் எந்தவித போரையும் தொடரப் போவதில்லை.. எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை.. நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரத்தில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்..

Categories

Tech |