துணிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள், ஸ்பீக்கர் என பல பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள பாசி பவளம் தெருவில் சிக்கந்தர் துல்கருணை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூரில் துணி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிக்கந்தர் வழக்கம்போல கடையை திறக்க சென்றுள்ளார்.
அப்போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த சிக்கந்தர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த துணிகள், செல்போன், ஸ்பீக்கர் என பல பொருட்கள் திருடு போயிருந்தது. இதனால் சிக்கந்தர் இச்சம்பவம் குறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.