சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ராக்கு என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் இந்த மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.