Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு வேண்டுமா…? இதை மட்டும் செய்தால் போதும்…. உங்களுக்கு கிடைத்துவிடும்…!!!

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக மத்திய அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிசான் கிரெடிட் கார்டுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வழங்குகின்றன. இதன்மூலமாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரம், விதை, பூச்சி போன்ற வேளாண் பொருட்களை வாங்க கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக கொடுக்கப்படும் கடனுக்கு 2 – 4 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

https://pmkisan.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்ததவர் உண்மையான விவசாயியா? குடும்ப வருமானம் என்ன? நில விவரங்கள் என்ன? போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படும். இதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ போன்றவை தேவைப்படும். மேலேயும் மற்ற வங்கியில் கடன் பாக்கி எதுவும் இருக்கக்கூடாது. மீன் வளர்ப்போர், கால்நடை வளர்ப்போர் ஆகியோரும் இந்த கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |