Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! அமைதியின்மை உண்டாகும்….! விட்டுகொடுத்து செல்ல வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! சின்ன பிரச்சனைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

இன்று சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவு கொடுப்பதாகவே அமையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுயமாக சிந்திக்க வேண்டும். சிந்தனையால் நல்ல முடிவை எடுக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். சில நேரத்தில் கோபங்கள் வெளிப்படும். குடும்பத்தாரிடம் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வருவதற்கான சூழல் நிறைய இருக்கின்றது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். தொழில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சின்ன பிரச்சனைகளை பெரிதுபடுத்த வேண்டாம். காதலினுடைய நிலைபாடுகள் கஷ்டத்தை கண்டிப்பாக கொடுக்கும். பேசும் போது கவனம் வேண்டும். கொஞ்சம் பார்த்து விட்டு கொடுத்து பேசுவது நல்லது. மாணவர்களும் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். முன்கோபம் வெளிப்படும். மாணவர்களும் யோசித்து செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது கரும் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: கரும் பச்சை மற் றும் நீலம்

Categories

Tech |