அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக 12 வயதை கடந்த இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டு அரசு தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே கூறுவதாவது “கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம். அதில் முதலில் 12 வயதை கடந்த இளம்பருவதினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்” என அறிவித்துள்ளார். இதனையடுத்து ஏற்கனவே 30 வயதை கடந்தவர்களுக்கு இலங்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இலங்கையில் கொரோனா பரவலின் காரணமாக இரவு நேர ஊரடங்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.