Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. படேல் சிலையை காண சுற்றுலா ரயில்…. செம அறிவிப்பு….!!!!

[4:50 PM, 8/17/2021] +91 94897 11232: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து முதன் முறையாக குஜராத்திலுள்ள உலகின் உயரமான படேல் சிலையை காண ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து இந்த சுற்றுலா ரயில் வருகிற 29-ஆம் தேதி புறப்பட்ட திண்டுக்கல், ஈரோடு, சென்னை வழியாக ஹைதராபாத், ஜெய்ப்பூர் கோட்டைகள், உதைப்பூர் அழகிய ஏரிகள் வழியாக படையல் சிலையை சென்று சேரும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. 12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் ஒருவருக்கு ரூ.11,340 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவலுக்கு 9003140680, 9840948484 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |