நடிகர் விஜய் ” BEAST” படத்தை தொடர்ந்து “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” புகழ் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்டிமேட் ஆன கதையை தேசிங் பெரியசமி சொல்ல,அதைக் கேட்டு உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் நடிகர் விஜய். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கடந்த ஆண்டு பிப்ரவரி வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். தனது முதல் படத்திலேயே ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்திருந்தார் இயக்குநர் தேசிங். அடுத்தப் படம் எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.