நாட்டின் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.5,503 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் ஈட்டிய வருமானமான ரூ.2,969 கோடியுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். விற்பனையில் ஏற்பட்ட விறுவிறுப்பையடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.58 கோடியிலிருந்து 4 மடங்கு அதிகரித்து ரூ.256 கோடியானது. கொரோனா இடா்பாட்டுக்கிடையிலும் 10.25 லட்சம் வாகனங்களை முதல் காலாண்டில் விற்பனை செய்துள்ளதாக ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.
Categories