ஆப்கான் தற்போது தாலிபான்கள் பிடியில் உள்ளது. அங்கிருந்து அச்சத்தில் வெளியேறும் மக்களுடைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது. விமானத்தின் டயர் பிடித்துக்கொண்டு தொங்கிய இரண்டு பேர் கீழே விழுந்து பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் இவர்களிடம் பெண்களும், சிறுமிகளும் சிக்கி என்ன பாடு பட போகிறார்களோ? என்று தான் பலருடைய கவலையாகவும் இருக்கிறது.
அந்த வகையில் நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இதே கவலைதான். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் பிள்ளைகளுடைய நிலைமை என்னவாகும்? இது குறித்து ஐநா ஏதாவது செய்ய முடியுமா? அவர்களை நினைத்தால் கதறி அழ வேண்டும் போல உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண்களுடைய நிலைமையை நினைத்தால் கண்ணீர் வருகிறது என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் #AfganistanWomen என்கிற தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
What has Afghanistan in store for the girl children?!!! #UnitedNations can do anything about it?!! No clues but worried , scared and depressed! But feeling helpless !!! Feel like crying aloud!!! #PrayersForAfghanistan
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) August 17, 2021