Categories
டெக்னாலஜி பல்சுவை

தமிழக அரசில் வேலை பார்க்கவேண்டுமா…? ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி….? வாங்க பார்க்கலாம்…!!!

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் , தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள்

குடும்ப அடையாள அட்டை

ஆதார் அட்டை

சாதி சான்றிதழ்

மதிப்பெண் சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை

முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில், click here for new user ID registration என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று கொடுக்கவேண்டும். அப்போது ஒரு பக்கம் திறக்கப்படும். அதில், பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.

பின்னர் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும். இதில் Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும். அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailக்கும் செய்ய வேண்டும். மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

Categories

Tech |