2 நாள் பயணமாக தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
இன்று சரியாக மதியம் 1.30 மணிக்கு சீன அதிபர் சென்னை விமான நிலையம் வருவார் பயணத்திட்டம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனி விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு சீன அதிபர் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்காக 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தமிழகம் இருந்து வருகின்றது.
இந்தியாவும் , சீனாவும் ஆசியாவின் மிக முக்கிய நாடுகளாக பார்க்கக்கூடிய நிலையில் தற்போது இந்த இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் வர்த்தக மற்றும் கலாச்சார ரீதியான பல்வேறு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றது. இந்த சந்திப்பில் மாலையில் பிரதமர் மோடியும் , சீன அதிபரும் சந்திக்கின்றனர்.