Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி! ரயிலில் பெண் பயணிகளுக்கு அதிரடி சலுகை…. IRCTC அறிவிப்பு…!!!

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 22ஆம் தேதி ரக்ஷா பந்தன் முன்னிட்டு இரண்டு முக்கிய வழித்தடங்களில் பயணிக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு மட்டும் கேஸ்புக் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி டெல்லி- லக்னோ மற்றும் மும்பை- அகமதாபாத் வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 5 சதவீத கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த சலுகையை ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட பயணங்களுக்கும் இதே சலுகையை மீண்டும் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.  மேலும் இந்த சலுகை அறிவிக்கப்படுவதற்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்த பெண்களுக்கும் சலுகை உண்டு என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |