தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கலின் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. அதனால் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைந்து ரூ.99.47- க்கு செய்யப்பட்டு வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இன்றியும், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. பெட்ரோல் விலை தமிழகத்தில் குறைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் 5-வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 99.47 ரூபாய்க்கும், டீசல் விலை முப்பத்தி மூன்று நாட்களுக்கு பிறகு 19 காசுகள் குறைந்து ரூ.94.20- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.