இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்ற பட்டியலில் அதிக செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதுதான். இந்தியாவில் சொந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமான முதல்வராக மு க ஸ்டாலின் 42% இடத்தை பிடித்து முதலிடத்தில் உள்ளார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 42 சதவீத ஆதரவு பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீதத்துடன் 2வது இடமும், கேரளா முதல்வர் பினராயி விஜயன் 35 சதவீதத்துடன் மூன்றாவது இடமும், 31 சதவீதத்துடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நான்காவது இடத்திலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 30 சதவீதம் பெற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.