Categories
பல்சுவை

“கள்ளச்சாவி போட்டால்” கையை கிழிக்கும்…. திண்டுக்கல் பூட்டு தோன்றிய விதம்…!!!

1930ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு செய்யும் பரட்டை ஆசாரி மாங்காய் வடிவத்தில் ஒரு பூட்டு செய்து கடையில் விற்பனைக்காக கொடுத்துள்ளார். சில நாட்களில் விற்று தீர்ந்து விடவே மக்கள் பரட்டை ஆசாரியை தேட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து 1945ஆம் ஆண்டு நம் மாநிலம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் திண்டுக்கல் பூட்டின் புகழ் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. திண்டுக்கல் பூட்டிற்கென்றே மக்களிடையே ஒரு தனி மவுசு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் பூட்டுக்கு மவுசு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

அதற்கு காரணம் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் என்ற இடத்தில் தொழிற்சாலைகளில்  இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் இந்தியா முழுவதும் படையெடுக்க ஆரம்பித்தன. இந்த பூட்டுகள் இயந்திரம் மூலம் செய்யப்படுவதால் மிகவும் மெல்லியதாகவும் பார்க்க அழகாகவும் இருந்ததால் மக்கள் இதை வாங்க தொடங்கிவிட்டனர். இதனால் திண்டுக்கல் பூட்டின் மவுசு குறைய ஆரம்பித்தது.

ஆனால் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த பூட்டுகள் எளிதில் உடையக்கூடியதும், திருட்டுக்கு உதவக்கூடியதுமாக இருக்கிறது. ஆனால் திண்டுக்கல் பூட்டில் கள்ளசாவி போட்டால் கையை கத்தி வந்து கிழித்துவிடும். அந்த அளவிற்கு வித்தியாசமாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் கைத்தொழிலாக இருக்கும் நம்முடைய திண்டுக்கல் பூட்டிற்கு மாறி, குடிசை தொழிலுக்கு கை கொடுக்க வேண்டும்.

Categories

Tech |