தலிபான்களை ஆஃப்கானிஸ்தான் அரசாக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்..
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் பயத்துடன் உள்ள நிலையில் உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன.. தலிபான்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதப்படுவதால் அந்த அரசை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன.. இதற்கிடையே தலிபான்கள் நாங்கள் எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை.. எனவே சர்வதேச அளவில் அனைவரும் எங்களை அங்கீகரிக்கவேண்டும் என்று தலிபான்கள் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
அதே நேரத்தில் ஆப்கான் தலிபான் அரசை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது.. அதுமட்டுமில்லாமல் தலிபான்களுடன் நட்பு ரீதியான உறவை மேம்படுத்த தயாரென்று சீனா அறிவித்துள்ள நிலையில், தலிபான்களின் செயல்பாட்டை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அவரிடம் ஆப்கானிஸ்தான் விவகாரம் பற்றி கேட்கப்பட்டது.. அப்போது அவர் கூறியதாவது, தலிபான்களை ஆஃப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை.. அவர்கள் ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட அரசை வலுக்கட்டாயமாகத் தூக்கி எறிந்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றனர்.. கனடா நாட்டின் சட்டத்தின்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்படுவார்கள் என்று திட்டவட்டமாக கூறினார்..
முன்னதாக சுமார் 20 ஆயிரம் ஆப்கானியர்களை அவர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் கனடாவில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.