பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆப்கானிஸ்தான் நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதால் அங்குள்ள மக்கள் அனைவரும் பதற்றத்தோடு விமான நிலையங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக மக்கள் விமானத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறுவது போன்ற காட்சிகளும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதாக உறுதி அளித்திருந்த நிலையில் இனி ஆப்கானிஸ்தான் நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்காக பிரான்ஸ் நாடு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து தன்னால் இயன்ற உதவியை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.