கொடநாடு கொலை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிக்க தொடங்கியதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்ட பேரவையில் 3ஆம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குதற்கு முன்பதாக நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு விவகாரத்தில் பொய் வழக்குகளை தொடர்ச்சியாக கொண்டு வருவதாக கூறி, அதிமுக சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது..
இதனையடித்து மேலும் பேசுவதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை.. இதனையடுத்து தமிழக அரசை கண்டிக்கும் விதமாக அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாக கருப்பு பேட்ஜ் அணிந்தும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.. அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.. கூட்டணி கட்சிகளான பாஜக, பாமகவும் வெளிநடப்பு செய்தது.
அதேநேரத்தில் பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்காது என்றும் அச்சப்பட தேவையில்லை என்றும் பதில் அளித்திருக்கிறார்.. அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து வளாகத்துக்கு வெளியே வந்து உட்கார்ந்து கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணை இன்று பேரவையில் எதிரொலித்துள்ளது.