நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்க பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தலிபான்கள் பேஸ்புக் கணக்குகள், தற்போது வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்களை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.