எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்.. சட்டப்படி எதிர்கொள்வோம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்..
சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. இதனையடித்து மேலும் பேசுவதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை..
இதனால் அதிமுக சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.. பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம்’ என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. அதேபோல கூட்டணி கட்சிகளான பாஜக, பாமகவும் வெளிநடப்பு செய்தது.. கலைவாணர் அரங்கின் வெளியே உட்கார்ந்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது..
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், எதிர்க்கட்சிகளுக்கு சட்ட மன்றத்தில் வாய்ப்பு தராத போக்கு தொடர்கிறது.. ”திமுக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், அதிகார பலத்தால் பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை நசுக்குகிறது”. எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்.. சட்டப்படி எதிர்கொள்வோம்.. இன்றும் நாளையும் சட்ட மன்றத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறினார்..