Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் 6-வது தடுப்பூசி…. மத்திய அரசு ஒப்புதல்…..!!!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டு தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் என 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6-வது தடுப்பூசியாக ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி வரவுள்ளது.
இந்த தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது கொரோனா தடுப்பூசி  ஆகும். இந்த தடுப்பூசி ஊசி இல்லாத இன்ஜெக்டரைப் பயன்படுத்தி போடப்படும்.

Categories

Tech |