தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலை போராட்ட வீரருமான குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயுமான கிருஷ்ணகுமாரி(78), வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.. இதனை ஆளுநர் தமிழிசை கண்ணீருடன் ட்விட்டரில் பகிர்ந்தார்.. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்…
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்.(2/2)
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2021
இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..