தமிழ் சினிமா நடிகர், நடன கலைஞர் என பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர் சுந்தர ராமு. இவருடைய டேட்டிங் டாபிக் தான் தற்போது கொஞ்சம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இவர் 30 வயது பெண்கள் முதல் 100 வயது பாட்டி வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. ரவுண்ட் கட்டி வருகிறார். இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும் தான் காதலை இன்னும் வெறுக்கவில்லை என்று இவர் கூறுகிறார்.
இவர் இதுவரை 335 பேருடன் டேட்டிங் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 365 டேட்டிங் தான் என்னுடைய இலக்கு. ஒவ்வொரு நாளும் காதலை தேடிக்கொண்டே இருக்கிறேன். இந்தியாவில் பெண்கள் உரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தான் இந்த முயற்சி. அப்போதுதான் அவரகளின் பிரச்சினைகள் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.