காபூலிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து பல பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் நகரில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் நோக்கில் அமெரிக்க இராணுவ சரக்கு விமானமானது அத்தியாவசிய பொருள்களுடன் சென்றது. ஆனால் சரக்குகளை இறக்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் விமானத்திற்குள் படையெடுத்து வந்ததால் அந்த விமானம் மீண்டும் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கட்டார் நாட்டின் அல் உதீத் விமான தளத்தில் தரை இறங்கியபோது மனித உடல் பாகங்கள் டயரில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விமானத்தில் பயணித்த மக்களிள் சிலர் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த காட்சிகளும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் குறைந்தது 7 பேர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை.