Categories
உலக செய்திகள்

மனித உரிமைகளை மதித்தால்…. தலிபான்களுடன் இணைந்து செயல்பட முடிவு…. தகவல் அறிவித்த ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்….!!

தலிப்பான் தீவிரவாதிகள் மனித உரிமைகளை மதித்தால் அவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்திய அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிப்பான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து  அங்கு அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. இதற்கிடையில் தலிப்பான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” அனைவரும் எங்களை நம்புங்கள். நாங்கள் ஆப்கானிஸ்தானில் மேலும் சண்டையிட போவதில்லை. எந்த நாட்டிற்கும் எதிராக நாங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட மாட்டோம்” என கூறியுள்ளார்.

இதனையடுத்து ஐரோப்பிய யூனியனில் கடந்த 17 ஆம் தேதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தினை ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர் ஜோசப் பொரல் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜோசப் பொரல் கூறுவதாவது “ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மனித உரிமைகளை மதித்தால் அவர்களுடன் இணைய நாங்கள் தயாராக உள்ளோம். இதனால் நான்  தலிப்பான்களின் அரசை அங்கீகரிக்கவில்லை. மேலும் நான் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உட்பட அனைத்தும் குறித்து அவர்களிடம் பேச உள்ளேன்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |