Categories
உலக செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த அமைப்பினருக்கு என்ன தொடர்பு..? உலகமே உற்று நோக்கும் ஆப்கானிஸ்தான்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 5 அமைப்பினர் இயங்குவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான் பயங்கரவாதிகளை தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையத்தில் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய உளவுத்துறை சமூகவலைதள கணக்குகளின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக உளவு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக உளவுத்துறை காவல்துறையினர் தமிழர்களுக்கு தலிபான்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் உளவுத்துறையினர் தமிழ்நாட்டில் உள்ள ஐந்து வலைதள கணக்குகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் அந்த ஐந்து வலைதள கணக்குகளை பின் தொடர்கின்றனர். இந்த ஐந்து வலைதள கணக்குகளை பின்பற்றுவோர் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை பெரிதாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். உலகமே ஆப்கானிஸ்தானை பற்றி கவலை கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 5 அமைப்பினர் தலிபான்களுக்கு ஆதரவாக இயங்குவது குறித்து உளவுத்துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |