Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்…… நெல்லையில் பரபரப்பு…..!!

நெல்லை  மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் உள்ள தனியார் மோட்டார்சைக்கிள் ஷோரூம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது வேலைப்பளுவின் கோபங்களை வீட்டில் உள்ளவர்களிடம் காட்டி வருவது வழக்கம்.

Related image

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று அதிகாலை 5 மணி அளவிலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா நிர்மலாவை சரமாரியாக தாக்கினார். அதில் மயங்கி விழுந்த அவர் வெகுநேரமாகியும் எழவில்லை என்பதால் அவர் முகத்தில் கை வைத்து பார்த்ததில் அவர் இறந்து போனது தெரிய வந்துள்ளது. எங்கும் தப்பிச் செல்லாமல் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார் பாரதிராஜா. அவரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு நடைபெற்று வருகிறது.

Categories

Tech |