Categories
உலக செய்திகள்

தலிபான்களிடமிருந்து தப்பிக்கும் அகதிகள்…. இங்கிலாந்தின் அதிரடி அறிவிப்பு….!!

ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது இங்கிலாந்த் அரசாங்கம் தலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்கு தங்களுடைய நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டிற்காக பணிபுரிந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் நடப்பாண்டில் ஆப்கானிஸ்தானில் வெளியேறும் அகதிகளில் சுமார் 5000 பேரை ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |