ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்தின் டிரைலரை மகேஷ் பாபு வெளியிட உள்ளார்.
தமிழ் திரையுலகில் கயல், பரியேறும் பெருமாள், சண்டிவீரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆனந்தி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருணா குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற தெலுங்கு படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆனந்தி கிராமத்தில் சோடா கம்பெனி நடத்தும் பெண்ணாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்திற்கு உதவ முன்வந்துள்ளார். அதாவது வருகிற ஆகஸ்ட் 19-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலரை மகேஷ் பாபு வெளியிட இருக்கிறார். இதனால் இந்த படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.