பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்க தங்களுக்கு எந்த விதமான திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாத குழு “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்” என்று ஆப்கானிஸ்தானை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இன்று தலிபான் குழுவினர் உலக நாடுகளிடம் புதிய அரசாங்கத்தை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “ஜனநாயக அரசாங்கத்தை தலிபான்கள் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் புதிய அரசாக தலிபான்களை ஏற்றுக்கொள்ள கனடாவிற்கு எந்த விதமான திட்டமும் இல்லை” என்று கூறியுள்ளார். மேலும் கனேடிய சட்டத்தின் கீழ் தலிபான் என்பது ஒரு பயங்கரவாத குழு ஆகும். எனவே தற்போது அப்பாவி மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதிலேயே தங்களின் கவனம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.