திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேலனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 மாதம் ஆகியுள்ளது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மீனா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.