வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முன்னதாக பெய்த மழையில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 9செ.மீ, நன்னிலம் 8 செ.மீ, திருவிடைமதூர் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Categories