பெரும்பாலும் கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை திரும்பவும் பயன்படுத்தி சமைப்பதால் சாப்பிடுபவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு முறை பயன்படுத்தும் சமையல் எண்ணெயை மறு உபயோகம் செய்வதை தடுக்கும் வகையில் அதை பயோடீசல் ஆக மாற்றும் திட்டத்தை ஆட்சியர் விஜயராணி தொடங்கி வைத்துள்ளார்.
இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 33 பயோடீசல் தயாரிப்பாளர்கள் மற்றும் 19 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 50 லிட்டருக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து உணவகங்கள், இனிப்பு காரம் தயாரிக்கும் கடைகள் வழங்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.