Categories
தேசிய செய்திகள்

10,000 kg இனிப்பு, 20 ஆடு, 50 பட்டுப் புடவை… போதும் லிஸ்ட் பெருசா போகுது… மனைவிக்கு கணவன் கொடுத்த சீர்வரிசை…!!!

ஆந்திரா மாநிலத்தில் ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைக்கச் சென்ற கணவன் பலவிதமான சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த பலராமகிருஷ்ணன் என்பவரின் மகள் பிரதிக்ஷா. இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் பிரதிக்ஷாவை அவரது தாய் வீட்டில் அழைத்துச்சென்றனர்.

பின்னர் ஆடி மாதம் முடிந்து மனைவியை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த பவன்குமார் 10 ஆயிரம் கிலோவில் 20 வகையான இனிப்புகள், வாழைத்தார்கள், 1000 கிலோ காய்கறிகள், 20 ஆடுகள், 50 பட்டு சேலைகள் மற்றும் பலவகையான பழங்கள் ஆகியவற்றை மனைவிக்கு சீராக கொடுத்து அழைத்து வந்துள்ளார். ஆடி மாதம் முடிந்து வீட்டிற்கு அழைக்க சென்ற கணவன் பிரமாண்டமாக சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.

Categories

Tech |