செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாக நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடரலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அந்த அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தேசித்து வந்த நிலையில் தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையை வெளியிட்டு இருக்கிறது.
அந்த அடிப்படையில் வருகின்ற ஒன்றாம் தேதியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவர்கள் எனது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50% மாணவர்கள் வந்தால் அடுத்த நாள் மேலும் 50% மாணவர்கள் வருவார்கள். அந்த அடிப்படையில் 50 சதவீதமானவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் 6அடி இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் கூடும் நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று சூழ்நிலைக்கேற்ப திறந்த வெளியிலும் வகுப்புகளை நடத்தலாம் என்றும், வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டிருக்கின்றன. பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய இருக்கைகள், மேஜைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பள்ளி வளாகங்களில் மாணவர்கள் ஒரே நேரத்தில் உள்ளே வருவதை தவிர்க்க வேண்டும், ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும், உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாது பள்ளிகளில் மாணவர்கள் அடிக்கடி உணவருந்தும் இடங்கள் மற்றும் சிறுநீர் கழிப்பதற்கான இடைவெளி நிமிடங்கள் போன்றவற்றில் மாணவர்கள் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற 1ஆம் தேதியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் திறப்பதற்கான முழுமையான வழிகாட்டி நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டும். அதற்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கு ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை ஆனது துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.